×

21 நாளில் பறிபோன நம்பர் 1 அந்தஸ்து!

ரஷ்ய வீரர் டானில் மெட்வதேவ்  ஏடிபி டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் முதல் இடம் பிடித்த 21 நாளில் மீண்டும் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஜோகோவிச் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். பிஎன்பி பாரிபா ஓபனுக்கு  பிறகு  தரவரிசையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 361 வாரங்களாக முதலிடத்தில் இருந்த ஜோகோவிச், கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளாமல் பிடிவாதம் காட்டி வருவதால், ஜனவரியில் நடந்த ஆஸி. ஓபனில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிப்ரவரியில் நடந்த துபாய் டூட்டி பிரீ தொடரில் பங்கேற்ற அவர், காலிறுதியில் வெளியேறியதால் 2வது இடத்தில் இருந்த மெத்வதேவ் ஒரு இடம் முன்னேறி முதல் முறையாக முதலிடம் பிடித்தார். பிஎன்பி பாரிபா ஓபனில் அவர் 3வது சுற்றில் பிரான்ஸ் வீரர் மான்பில்சிடம் தோற்று வெளியேறினார். இதனால் அவர் தரவரிசையில் ஒரு இடம் இழந்து மீண்டும் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். வெறும் 21 நாட்கள் மட்டுமே அவர் முதல் இடத்தில் இருந்தார். நடால் ஒரு இடம் முன்னேறி 3வது இடத்தை பிடித்துள்ளார். பிஎன்பி பாரிபா ஓபனில் பட்டம் வென்ற  டெய்லர் பிரிட்ஸ் 12 இடங்கள் முன்னேறி 8 வது இடத்தை எட்டியுள்ளார். மகளிர் ஒற்றையர் தர வரிசையில் ஆஷ்லி பார்டி (ஆஸி.) தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். கத்தார் ஓபன், பின்பி பாரிபா சாம்பியன் பட்டங்களை வென்ற ஸ்வியாடெக் 2 இடங்கள் முன்னேறி 2வது இடத்தையும், மரியா சாக்கரி 3 இடங்கள் முன்னேறி 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்….

The post 21 நாளில் பறிபோன நம்பர் 1 அந்தஸ்து! appeared first on Dinakaran.

Tags : Danil Medvdev ,ATP ,Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்